CAF-இன் தனிப்பட்ட தரவுகள் கசிவு: உள்துறை அமைச்சகத்தை குறிவைத்ததும் ஒருவரா??
18 மார்கழி 2025 வியாழன் 21:53 | பார்வைகள் : 506
CAF தொடர்பான தனிப்பட்ட தரவுகள் பெருமளவில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “இந்திரா” (Indra) என அழைக்கப்படும் ஹேக்கர், உள்துறை அமைச்சக தரவுகளை திருடியதாக கூறிய பின்னர், CAF, MSA மற்றும் CNOUS ஆகிய அமைப்புகளின் தரவுத்தளங்களில் இருந்து வந்ததாகக் கூறப்படும் 15 ஜிபி அளவுள்ள கோப்புக்களை, திருடப்பட்ட தரவுகளை வெளியிடவும் மறுவிற்பனை செய்யவும் பயன்படும் இணையதளமான BreachForums இல் வெளியிட்டுள்ளார்.
இதில் சுமார் 40 லட்சம் பயனாளர்களின்
- பெயர்கள்,
- பிறந்த தேதிகள்,
- மின்னஞ்சல் முகவரிகள்,
- தொலைபேசி எண்கள்,
போன்ற விவரங்கள் உள்ளன. "கசிந்த தரவுகளில் எந்த வங்கி விவரங்களும் அல்லது கடவுச்சொற்களும் இல்லை" என்று CAF தனது இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு, நிகழ்வின் தீவிரத்தை குறைக்க முயன்றுள்ளது; இருப்பினும் தரவு கசிவு நடந்ததை CAF ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த தரவு கசிவால், மின்னஞ்சல் மற்றும் SMS மூலம் நடைபெறும் மோசடிகளின் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் CAF தனது அறிக்கையில்,
- சரியாக எழுதப்படாத அல்லது எழுத்துப் பிழைகள் உள்ள மின்னஞ்சல்களை எச்சரிக்கையாக அணுகுங்கள்
- அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பை மட்டுமே பயன்படுத்துங்கள்
- உங்கள் கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றுங்கள் என்று அறிவுறுத்ததியுள்ளது.
இதற்கு முன்னர், அதே ஹேக்கர் காவல் துறையின் ரகசிய கோப்புகளான TAJ மற்றும் தேடப்படும் நபர்கள் பட்டியல் (FPR) உள்ளிட்ட தரவுகளையும் அணுகியதாகக் கூறியிருந்தான். இந்த தொடர்ச்சியான சைபர் தாக்குதல்களின் பின்னணியில், 2003-ஆம் ஆண்டு பிறந்த ஒரு இளைஞர் லிமோஜ் அருகே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது, அரசின் தனிப்பட்ட தரவு செயலாக்க அமைப்புகளை குழுவாகச் சேர்ந்து தாக்கிய சந்தேகத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan