Paristamil Navigation Paristamil advert login

சீனாவிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ள இரட்டைப் பெண்டா கரடிகள்

சீனாவிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ள இரட்டைப் பெண்டா கரடிகள்

17 மார்கழி 2025 புதன் 15:33 | பார்வைகள் : 169


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள உஎனோ உயிரியல் பூங்காவில் உள்ள நான்கு வயதான இரட்டைப் பெரும் பெண்டா கரடிகள் சியாவோ சியாவோ மற்றும் லே லே ஆகியவற்றை 2026 ஜனவரி 31க்குள் சீனாவிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிகாரபூர்வமாக திருப்பி அனுப்ப வேண்டிய கடைசி நாள் 2026 பிப்ரவரி 20 என்றாலும், 2026 ஜனவரி 31க்குள் பெண்டாக்களை திருப்பி அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இதற்காக டிசம்பர் 27, 2025 முதல் உஎனோ உயிரியல் பூங்காவில் 30 நாள் தனிமைப்படுத்தல் நடைமுறை மேற்கொள்ளப்படும்.

இந்த தனிமைப்படுத்தல் காலம் ஜனவரி 25, 2026 அன்று முடிவடையும். அதன்போது பொதுமக்கள் பெண்டாக்களை கடைசியாக நேரில் காண முடியும்.

டோக்கியோ அரசு சீனாவிடமிருந்து புதிய பெண்டாக்களை கடனாக பெறுவதற்கான கோரிக்கையையும் முன்வைத்துள்ளது. ஆனால் இதுவரை சீன அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமான பதில் கிடைக்கவில்லை.

இதற்கு முன், மேற்கு ஜப்பானின் கோபே நகரில் உள்ள ஓஜி உயிரியல் பூங்காவில் இருந்த ஒரு பெண் பெண்டா 2024 மார்ச் மாதத்தில் உயிரிழந்தது.

மேலும், வகாயாமா மாகாணத்தில் உள்ள ஒரு தீம் பூங்காவில் இருந்த நான்கு பெண்டாக்கள் 2024 ஜூன் மாதத்தில் சீனாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டன.

தற்போது உஎனோ உயிரியல் பூங்காவில் உள்ள இந்த இரட்டைப் பெண்டாக்களே ஜப்பானில் உள்ள கடைசி பெரும் பெண்டாக்களாக உள்ளன.

1972 ஆம் ஆண்டு, சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் முதன்முறையாக பேண்டாக்கள் ஜப்பானுக்கு கொண்டுவரப்பட்டன.

அதன் பின்னர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானில் பெண்டாக்கள் இருந்த நிலையில், இப்போது அவை அனைத்தும் திருப்பி அனுப்பப்படுவதால், ஜப்பானில் முதன்முறையாக பேண்டாக்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்