Paristamil Navigation Paristamil advert login

பசிபிக் கடலில் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் - 8 பேர் பலி

பசிபிக் கடலில் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் - 8 பேர் பலி

17 மார்கழி 2025 புதன் 15:33 | பார்வைகள் : 166


பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் நேற்று 16.12.2025 இந்தத் தாக்குதலை நடத்தியது.

இந்தப் படகுகள் பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் பாதையில் சென்றதாகவும், கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் உளவுத்துறை உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என இராணுவம் தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமை காட்டி வரும் நிலையில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படகுகள் இதேபோல் தாக்கப்பட்டுள்ளன.

ஆனால் அவை போதைப்பொருள் படகுகள் இல்லை என்றும் இந்தத் தாக்குதல்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்றும் விமர்சனம் எழுந்தது.

ஆனால், சர்வதேச சட்டங்களின்படியே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பென்டகன் விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்