Paristamil Navigation Paristamil advert login

உள்துறை அமைச்சகத்தில் கடுமையான சைபர் தாக்குதல்!!

உள்துறை அமைச்சகத்தில் கடுமையான சைபர் தாக்குதல்!!

17 மார்கழி 2025 புதன் 08:17 | பார்வைகள் : 403


டிசம்பர் தொடக்கத்தில் உள்துறை அமைச்சகம் ஒரு மிகவும் கடுமையான சைபர் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது. இந்த தாக்குதல் அமைச்சகத்தின் மின்னஞ்சல் அமைப்புகள் மற்றும் சில முக்கிய கோப்புகளை குறிவைத்ததாக அமைச்சர் லோரன் நுன்யெஸ் உறுதிப்படுத்தி உள்ளார். 

தொடக்கத்தில் பெரும் சேதம் இல்லை என கூறப்பட்டாலும், ஹேக்கர்கள் லட்சக்கணக்கான பிரெஞ்சு குடிமக்களின் தனிப்பட்ட தரவுகளுக்கு அணுகல் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. அமைச்சகம் வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்தியதாக தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை BreachForums என்ற தளத்தில் ஹேக்கர்கள், சுமார் 1.64 கோடி பிரெஞ்சு மக்களின் நீதித்துறை, வரி மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான ரகசிய தரவுகள் தங்களிடம் இருப்பதாகக் கூறி உள்ளனர். இதில் நீதித்துறை முன் பதிவுகள் (TAJ), தேடப்பட்ட நபர்கள் பட்டியல் (FPR) உள்ளிட்ட கோப்புகள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலுக்குப் பின்னால் வெளிநாட்டு தலையீடு அல்லது சைபர் குற்றக் குழுக்களின் பழிவாங்கல் நடவடிக்கை இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்