பண்டிகை காலத்தில் கவனம்: சோமோன் பியூமேயில் பக்டீரியா!!
16 மார்கழி 2025 செவ்வாய் 17:55 | பார்வைகள் : 419
Grand Frais நிறுவனத்தின் சோமோன் பியூமே( saumon fumé) மீன் தயாரிப்பு, லிஸ்டீரியா பக்டீரியா மாசுபாடு காரணமாக சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இந்த சோமோன் மீன் 140 கிராம் எடையுடைய 4 துண்டுகளைக் கொண்ட பக்கேற்றில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 25310013 என்ற இலக்கங்களை கொண்ட தொகுதி மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. பார்கோடு 3492610004610 மற்றும் காலாவதி தேதி 30/11/2025 அல்லது 05/12/2025 கொண்ட இந்த தயாரிப்பு, Grand Frais, Fresh கடைகளிலும் monmarche.fr இணையதளத்திலும் விற்கப்பட்டுள்ளது. சந்தைப்படுத்தலின் முடிவு தேதி 04/01/2026 வரையாகும்.
இதை ஒருபோதும் உண்ண வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சோமோன் மீனை உண்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் முதியவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். லிஸ்டீரியோசிஸ் என்பது எட்டு வாரங்கள் வரை அடைகாக்கும் காலத்தைக் கொண்ட ஒரு தீவிர நோயாகும்".
இந்த தயாரிப்பை வாங்கியவர்கள் டிசம்பர் 29க்குள் கோரிக்கை விடுத்து பணத்தைத் திரும்பப் பெறலாம். கடந்த வாரமும், டெல்பிராட் நிறுவனத்திலிருந்து வந்த இந்த தயாரிப்பு திரும்பப் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan