Paristamil Navigation Paristamil advert login

சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பின் வருத்தம் இல்லை, ஆனால் மன்னிப்பு கேட்டுள்ள பிரிஜித் மக்ரோன்!!

சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பின் வருத்தம் இல்லை, ஆனால் மன்னிப்பு கேட்டுள்ள பிரிஜித் மக்ரோன்!!

16 மார்கழி 2025 செவ்வாய் 08:11 | பார்வைகள் : 979


ஆரி அபித்தான் நிகழ்ச்சியை சில பெண்ணியவாதிகள் இடைமறித்த சம்பவம் தொடர்பாக, அவர்களை குறித்து “அந்த அழுக்கு நாய்க்குட்டிகள இருந்தால், அவர்களை வெளியே தூக்கி எறிந்து விடுவோம்!” என்று கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு விளக்கம் அளித்து பிரிஜித் மக்ரோன் பேசியுள்ளார். 

“இது பொதுமக்களுக்காக அல்ல.. பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிக்கவும். நான் நினைப்பது அவர்களை மட்டுமே”  இந்த கருத்துகள் தனிப்பட்ட சூழலில் சிலரிடம் மட்டுமே கூறப்பட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அந்த வார்த்தைகளுக்காக அவர் வருத்தப்படுகிறாரா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, தனது வார்த்தைகளுக்காக தான் வருத்தப்படவில்லை என்றும் குடியரசுத் தலைவரின் மனைவியாக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் தன்னிச்சையாகவும் பொருத்தமற்ற முறையிலும் பேசிவிடக்கூடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்