Paristamil Navigation Paristamil advert login

சந்தேகத்திற்குரிய பொதி - சிக்கிய ஆயுதக் கடத்தல்!!

சந்தேகத்திற்குரிய பொதி -  சிக்கிய ஆயுதக் கடத்தல்!!

15 மார்கழி 2025 திங்கள் 13:03 | பார்வைகள் : 438


கிராஸ் (Grasse - Alpes-Maritimes) காவல்துறை நடத்திய நடவடிக்கை மூலம் ஆயுதக் கடத்தல் வலையமைப்பு ஒன்று முறியடிக்கப்பட்டது. நான்கு பேர் கைது செய்யப்பட்டு தற்காலிகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகமான ஒரு பொதி வழியாக வலையமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. கிராஸ் காவல்துறை நடத்திய விசாரணையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு தற்காலிக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. Peymeinade  என்ற அமைதியான நகரில் வசிக்கும் ஒருவருக்கான, சந்தேகமான பொதி ஒன்று கைப்பற்றப்பட்டது. அந்தப் பொதிக்குள், காவல்துறை 30 குண்டுகள் அடங்கிய போராயுதத்திற்கான ரவைக் கூட்டினை (chargeur) கண்டுபிடித்தது.

«இது அரச ஆணையத்தின் அனுமதி இல்லாமல் வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயுதக் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு நாங்கள் சென்றோம்» என்று கிராஸ் காவல்துறை தலைவரஇ மேத்தியூ ஜார்னிகன் விளக்கமளித்தார்.

காவல்துறை, மிக விரைவாக அனுப்பியவரையும், பொதி பெறும் தம்பதியையும் கண்டுபிடித்தது. மேலும், துப்பாக்கி சுடும் உரிமம் பெற்ற நான்காவது நபரும் இதில் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தம்பதியரை வீட்டில் கைது செய்யும் போது, போராயுதம் போல தோற்றமளிக்கும் தோள்துப்பாக்கி மற்றும் 30 குண்டுகள் கொண்ட ரவைக் கூடும் கைப்பற்றப்பட்டது.

இந்த நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு தற்காலிக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்
 

வர்த்தக‌ விளம்பரங்கள்