Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : நகைக்கடையில் கொள்ளை! - இருவர் கைது!!

பரிஸ் : நகைக்கடையில் கொள்ளை! - இருவர் கைது!!

14 மார்கழி 2025 ஞாயிறு 19:50 | பார்வைகள் : 546


பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Histoire d'Or நகைக்கடை கொள்ளையிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை 10 மணி அளவில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. Rue du Commerce வீதியில் உள்ள குறித்த நகைக்கடைக்கு வந்த இரு முகமூடி அணிந்த கொள்ளையர்கள், அங்கிருந்த €30,000 யூரோக்கள் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் அவசர இலக்கமான 17 இற்கு பலர் தகவல் தெரிவித்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

கொள்ளையர்களில் ஒருவர் 16 வயதுடைய சிறுவன் எனவும், அவன் கைது செய்யப்பட்டுள்ளான் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, கொள்ளையிடப்பட்ட அனைத்து பொருட்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்