Paristamil Navigation Paristamil advert login

ஸ்பெயின் – இவ்லின் இடையே 1.5 டன் கஞ்சா பறிமுதல்!!

ஸ்பெயின் – இவ்லின்  இடையே 1.5 டன் கஞ்சா பறிமுதல்!!

14 மார்கழி 2025 ஞாயிறு 13:45 | பார்வைகள் : 487


ஸ்பெயின் மற்றும் பிரான்சின் இவ்லின் (Yvelines) மாகாணத்துக்கிடையே நடைபெற்ற “கோ-பாஸ்ட்” முறையிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில், 9 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இவ்லின் போதைப்பொருள் தடுப்பு அலுவலகமான "Ofast 78" தொடங்கிய விசாரணையின் மூலம், சுமார் 1.5 டன் கஞ்சா ரெசின் (1,463 கிலோ) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணை இரண்டு மாதங்களாக வெர்செய் அரசுத் தரப்பின் மேற்பார்வையில் நடந்து, டிசம்பர் 9 அன்று 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல், குற்றவாளிகள் கூட்டமைப்பில் பங்கேற்பு, மேலும் சிலர் மீது குறியாக்க தகவல் மறை குறி விசைகளை அதிகாரிகளிடம் வழங்க மறுத்தது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

ஸ்பெயின்–பிரான்ஸ் இடையே பல அதிவேக வாகனங்கள் மூலம் கடத்தல் நடைபெற்றதாக விசாரணை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை பாராட்டிய உள்துறை அமைச்சர் லாரன்ட் நுன்யெஸ் (Laurent Nuñez), போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் அரசின் உறுதியை இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்