Paristamil Navigation Paristamil advert login

நீஸ் விமானநிலைய காவல்துறை அதிகாரிகள் விசாரணையில்!!

நீஸ் விமானநிலைய காவல்துறை அதிகாரிகள் விசாரணையில்!!

13 மார்கழி 2025 சனி 20:31 | பார்வைகள் : 1327


நீஸ் விமானநிலையத்தின் (Aéroport de Nice) வான் மற்றும் எல்லைக் காவற்துறையான PAF (Police de l’Air et des Frontières) அதிகாரிகள் இருவர் போதைப்பொருள் லஞ்சக் குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படத்தப்பட்டுள்ளனர்.

ஒரு காவல்துறை அதிகாரி ஊழல் குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் விரைவில் நீதிபதியிடம் அழைக்கப்படவுள்ளார்.

ஆரம்ப தகவலின்படி, ஒவ்வொரு போதைப்பொருள் கடத்தலுக்கும் அவர்கள் கண்களை மூடுவதற்காக 1000 யூரோ பெற்றதாக கூறப்படுகிறது.

விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், இது பிரான்சில் அரிதாகக் காணப்படும் ஊழல் நிலையை வெளிப்படுத்தும்.96 மணி நேர தடைக்காவல் விசாரணையின் பின்னர் குற்றவியல் விசாரணை நீதிபதி, நீஸ் விமான நிலையத்தின் காவல்துறை அதிகாரியை, Alpes-Maritimes-இல் போதைப்பொருள் கடத்தலுக்கு உதவியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வியாபாரம், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், ஏற்கனவே ஊழல் வழக்குகளில் பெயர் பெற்ற இந்த காவல்துறை அதிகாரி லஞ்சம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

அவர் பிரான்சின் தெற்குப் பகுதியில் உள்ள சிறையில் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளார். நீஸ் விமானநிலையத்தில் பணிபுரியும் மற்றொரு காவல்துறை அதிகாரி, குறைந்த அளவில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்பட்டதால், பின்னர் நீதிபதியிடம் அழைக்கப்படவுள்ளார்.

குற்றச்சாட்டுகள் 2019 முதல் 2024 வரை நடந்ததாககதெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போதைப்பொருள் கடத்தலுக்கும் 1000 யூரோ பெற்றதாக குற்றவாளிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். சம்பவங்கள் தனியார் விமான நிலையத்திலும், முக்கிய விமான நிலையத்திலும் நடந்ததாகவும் கூறப்படுகினறது.

நீஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவினர், Sky ECC என்ற பயன்பாட்டின் குறியீடுகளை உளவறிந்ததன் மூலம் இந்த வழக்கில் பணியாற்றத் தொடங்கினகார்கள்.
ஒருகாலத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட இந்த பயன்பாடு, உடைக்க முடியாததாகக் கருதப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதன் ரகசியங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்