விபத்தில் கொல்லப்பட்டவர் ஈழத்தமிழர்!!
13 மார்கழி 2025 சனி 19:19 | பார்வைகள் : 1530
Mitry-Mory (Seine-et-Marne பகுதியில் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு இளைஞன் தனது மின் இயந்திர உருளியில் (Trottinette électrique) பயணம் செய்துகொண்டிருந்தபோது விபத்தில் உயிரிழந்தார். 22 வயதுடைய இந்த இளைஞன் இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞன் என்றும், சமீபத்திலேய தனது குடும்பத்துடன் மித்ரி நகரில் குடியேறியிருந்தார் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்னும் வெளிச்சம் வராத காலை சுமார் 7.30 இற்கு, மழை பெய்து கொண்டிருக்கும் ஈரமான சாலையில் அவர் பயணம் செய்துகொண்டிருந்தார். ஒரு சிற்றுந்து அவரை மோதியயெறிந்தது. அந்தச் சிற்றுந்துச் சாரதி அவரை அப்படியே விட்டு விட்டு சிற்றுந்தில் தப்பிச் சென்றுள்ளார்.
சில நிமிடங்களில் பாதசாரி ஒருவர் தரையில் உயிரற்ற நிலையில் கிடந்த இந்த இளைஞனின் உடலத்தைக் கண்டு, காவற்துறையினரிற்குத் தகவல் அளித்துள்ளார். உடனடியாக வந்த அவசர உதவி குழுவினரால் இளைஞனின் சாவை மட்டுமே உறுதிப்படுத்த முடிந்தது.
விசாரணை உடனடியாக தொடங்கப்பட்டது. ஆனால் அது மிக சிக்கலானதாக இருந்தது. Mitry-Mory நகரில் கண்காணிப்பு ஒளிப்பதிவுகள் இல்லை. அதிகாலை நேரத்தில் சாட்சிகளைப் பெறுவதும் கடினம்.
இருப்பினும் விசாரணையாளர்கள் குற்றவாளியை அடையாளம் கண்டனர். வேலைக்குச் சென்ற இந்தச் சாரதி தனது முதலாளியிடம் மின் இயந்திர உருளியில் சென்ற ஒருவரைத் தான் மோதியதாகத் தெரிவித்துள்ளார். அவர் உடனடியாகக் காவற்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
முப்பது வயதான ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவரது இரத்தத்தில் 1.5 கிராம் அல்கஹோல் இருப்பது கண்டறியப்பட்டது.
« மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட வீதிக் கொலை மற்றும் ஆபத்தில் இருந்தவரிற்கு உதவி செய்யாமை? மற்றும் தப்பிச் சென்ற குற்றச்சாட்டில் அவர் காவலில் வைக்கப்பட்டார்» என அரசுசார் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மின் இயந்திர உருளியில் பயணிகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள்.
2025ஆம் ஆண்டு பலர் விபத்திற்குள்ளாகியும் பலியாகியும் உள்ளனர். இதில் தறபோதைய சாவாக இந்தத் தமிழ் இளைஞனின் சாவு அமைந்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan