மீண்டும் வீதிகளுக்கு இறங்கிய விவசாயிகள்! - வீதிகள் முடக்கம்!!
13 மார்கழி 2025 சனி 08:27 | பார்வைகள் : 208
விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் மீண்டும் வீதிமுடக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று டிசம்பர் 13, சனிக்கிழமை அதிகாலை முதல் Toulouse, Bayonne, மற்றும் Auch போன்ற நகரங்களை ஊடறுக்கும் A64 வீதியை பல இடங்களில் முடக்கியுள்ளனர். உழவு இயந்திரங்களை வீதிகளில் நிறுத்தி போக்குவரத்தை முடக்கியுள்ளனர்.
பசுமாடுகளில் பரவும் bovine lumpy எனும் தோல் வியாதிகளை அரசு கட்டுப்படுத்த தவறுகிறது எனவும், முறையான மற்றும் அவசியமான நடவடிக்கைகளை எடுக்க மறுக்கிறது எனவும் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அத்தோடு, இறைச்சிகாக மாடுகளை வெட்டுவததில் அரசு கொண்டுவந்துள்ள இறுக்கமான நடவடிக்களை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகிறது.
இன்று மொத்தமாக ஏழு இடங்களை முடக்க உள்ளதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan