Paristamil Navigation Paristamil advert login

மியூச்சுவல் காப்பீட்டு கட்டணங்கள் மீண்டும் உயர்வு!!

மியூச்சுவல் காப்பீட்டு கட்டணங்கள்  மீண்டும் உயர்வு!!

11 மார்கழி 2025 வியாழன் 08:12 | பார்வைகள் : 474


பிரான்சில் பரஸ்பரக் காப்பீட்டு (mutuelle) கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, மேலும் புதியதாக விதிக்கப்பட்ட 1 பில்லியன் யூரோக்கள் கூடுதல் வரியின் காரணமாக வருங்காலத்தில் இன்னும் உயரக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

ஏற்கனவே பல ஓய்வுபெற்றவர்கள் மாதந்தோறும் அதிக தொகையை செலுத்துவதில் சிரமப்படுகிறார்கள். சிலர் 135 முதல் 250 யூரோக்கள் வரை செலுத்தி வருகிறார்கள், இது அவர்களுக்கு மிகப் பெரிய சுமையாக உள்ளது. 2024 இல் 7% அதிகரிப்பு, 2025 இல் 6% அதிகரிப்பு, அடுத்த ஆண்டு ஒப்பந்தத்தைப் பொறுத்து 10% வரை அதிகமாக இருக்கும். இந்த உயர்வுகள் காரணமாக, சிலர் தங்களுடைய சுகாதாரக் காப்பீட்டை விட்டுவிடும் நிலைக்கும் தள்ளப்படலாம்.

காப்பீட்டு நிறுவனங்களின் கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டுக்கான கட்டணங்கள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதால் உடனடி மாற்றம் இருக்காது. எனினும், வரி விகிதங்கள் உயரும்போது ஒப்பந்த செலவுகள் காலப்போக்கில் அதிகரிப்பது தவிர்க்க முடியாதது. அதனால் இந்த புதிய வரி அடுத்த சில ஆண்டுகளில் காப்பீடு பெற்றவர்களின் செலவுகளை நேரடியாக பாதிக்கக்கூடும். நிபுணர்கள் இதன் உண்மையான விளைவுகளை தற்போது மதிப்பிட முடியவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்