லூவர், வெர்சாய் : நுழைவுக்கட்டணம் அதிகரிப்பு!!
10 மார்கழி 2025 புதன் 19:26 | பார்வைகள் : 1225
லூவர் அருங்காட்சியகம் மற்றும் வெர்சாய் அரண்மனைக்கான நுழைவுக்கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. ஐரோப்பியர்கள் அல்லாதவர்களுக்கு இந்த கட்டணம் அதிரிக்கப்பட உள்ளது.
வெர்சாய் கட்டணம் 3 யூரோக்களால் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சென்ற ஆண்டு வெர்சாய் அரண்மனை 8.4 மில்லியன் பார்வையாளர்களைச் சந்தித்திருந்தது. அவர்களில் 83% சதவீதமானவர்கள் வெளிநாட்டவர்களாவர்.
அதேவேளை, லூவர் அருங்காட்சியகத்தின் நுழைவுக்கட்டணம் 45% சதவீதத்தால் அதிகரிக்கப்பட உள்ளது. தற்போதுள்ள 22 யூரோக்கள் கட்டணம் வரும் ஜனவரி 14 ஆம் திகதி முதல் 32 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
அதேவேளை, பரிசில் உள்ள ஏனைய பல சுற்றுலா தலங்களுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட உள்ளதாக கலாச்சார அமைச்சர், நேற்று டிசம்பர் 9 ஆம் திகதி அறிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan