Paristamil Navigation Paristamil advert login

ஏழை குடும்பங்கள் ஆண்டுக்கு 900 யூரோக்கள் வரை இழப்பு??

ஏழை குடும்பங்கள் ஆண்டுக்கு 900 யூரோக்கள் வரை இழப்பு??

10 மார்கழி 2025 புதன் 14:59 | பார்வைகள் : 1947


புதிய மகப்பேறு விடுப்பிற்கு நிதியளிக்க பிரான்ஸ் அரசு, இரண்டாவது குழந்தைக்கான குடும்பப்தொகை அதிகரிக்கும் வயதைக் 14 லிருந்து 18 ஆக மாற்ற திட்டமிட்டுள்ளது. 

யுனாஃப் (Unaf) இந்த புதிய பிறப்பு விடுப்பு 2026 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தாலும், இந்த மாற்றம் வறிய குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அதன் தலைவர் பெர்னார்ட் ட்ராஞ்சான் (Bernard Tranchand) எச்சரிகத்துள்ளார். 

மாதாந்தம் 14 வயதிலிருந்து கூடுதலாக வழங்கப்பட்ட 19 முதல் 75 யூரோக்கள் வரை இனி 18 வயதில் மட்டுமே வழங்கப்படும்; இதனால் மிகவும் வறிய குடும்பங்களுக்கு வருடத்திற்கு 900 யூரோக்கள் வரை இழப்பு ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.

குழந்தை 14 வயதை எட்டும் போது குடும்பச் செலவுகள் அதிகரிப்பதை நினைவூட்டும் யுனாஃப், குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்க  வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. இன்றைய சூழலில் குழந்தை பெறுவது கூட குடும்பங்களை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்துகிறது என ட்ராஞ்சான் வருத்தம் தெரிவித்து உள்ளா பலர். 

எனவே பிரான்சில் குடும்பக் கொள்கை குறித்த பார்வையை மாற்ற வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்: "இளைஞர்களும் குடும்பங்களும் தேசத்திற்கு ஒரு பொருளாதார சொத்தாக நாம் நினைக்க வேண்டும்: ஆரம்பத்தில் குடும்பங்களிலும் குழந்தைகளின் நல்வாழ்விலும் முதலீடு செய்யும் அனைத்தையும், காவல்துறையிலோ அல்லது நீதி அமைப்பிலோ செலுத்த மாட்டோம்." "குடும்பக் கொள்கையை எதிர்காலத்தில் ஒரு முதலீடாகக் கருத வேண்டும், ஒரு சுமையாக அல்ல ," என்று பெர்னார்ட் டிரான்சண்ட் விளக்கி உள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்