நூதன முறையில் மணமகன் உடை! - செலவைக் குறைக்க நூதன திட்டம்!!
1 கார்த்திகை 2025 சனி 19:57 | பார்வைகள் : 750
திருமணச் செலவைக் குறைக்க பிரெஞ்சு நபர் ஒருவர் நூதனமான செயல் ஒன்றில் ஈடுபட்டார்.
மணமகனது உடையில் ஏராளமான நிறுவனங்களின் விளம்பரங்களை பதிந்து, விளம்பரப்படுத்தியுள்ளார். இதற்காக ஒவ்வொரு நிறுவனங்களிடம் இருந்தும் கணிசமான பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார். அந்த உடையினை அணிந்துகொண்டு திருமணத்தை நிகழ்த்தி முடித்துள்ளார்.
Dagobert Renouf என்பவரது இந்த திருமணம் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. மொத்தமாக 26 நிறுவனங்களது விளம்பரங்கள் பதியப்பட்ட அவரது திருமணக்கோல புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

























Bons Plans
Annuaire
Scan