அமெரிக்காவில் சிறுவன் ஒருவனை சுட்டுக்கொன்ற பொலிஸார்
1 கார்த்திகை 2025 சனி 16:41 | பார்வைகள் : 241
அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் தனது பாட்டியைக் கொன்ற 13 வயது சிறுவன் பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட சிறுவனின், 68 வயதான பாட்டியின் உடல் அவர் வசித்த வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட 13 வயது சிறுவன் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்ததாக கூறப்படுகிறது.
காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்ய முயன்றபோது, சிறுவன் அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்தே காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து , வட கரோலினா மாநில புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன


























Bons Plans
Annuaire
Scan