Paristamil Navigation Paristamil advert login

புதிய மாதம்! - புதிய மாற்றங்கள்!!

புதிய மாதம்! - புதிய மாற்றங்கள்!!

1 கார்த்திகை 2025 சனி 07:00 | பார்வைகள் : 1113


இன்று நவம்பர் 1. புதிய மாதத்தில் பிரான்சில் பல சட்ட மற்றும் நடைமுறைகள் மாற்றம்பெறுகின்றன. அவற்றைத் தொகுக்கிறது இந்த பதிவு.

குளிர்கால வெளியேற்றம்!

trêve hivernale எனப்படும் வாடகைக்கு வசிப்பவர்களை  குளிகாலங்களின் போது வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது எனும் சட்டம் இன்று 1 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வருகிறது. காவல்துறையினர், நீதிமன்ற அறிக்கை இல்லாமல், வாடகை செலுத்தவில்லை எனும் காரணத்தை காட்டி, வாடகைக்கு குடியிருப்பவர்களை வெளியேறச் சொல்ல முடியாது.

இந்த நடைமுறை மார்ச் 31 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.
***

புகையிலை அற்ற மாதம்!

ஒவ்வொரு ஆண்டும் «mois sans tabac» எனும் புகையிலை அற்ற மாதமாக நவம்பர் மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. புகைப்பழக்கத்தை அடியோடு நிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்றான இது, இன்று நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை கடைபிடிக்கப்படுகிறது. புகைப்பழக்கம் இல்லாத எதிர்கால சந்ததியினரை உருவாக்குவோம்.

குளிர்கால ‘டயர்’!!

குளிர்காலங்களில் ஏற்படும் பனிப்பொழிவு, ஈரத்தன்மையில் இருந்து பாதுகாக்க உங்கள் வாகங்களில் ‘குளிர்காலத்துக்கு ஏற்றது போன்ற ‘டயர்களை’ பொருத்துவது கட்டாயமானதாகும். 2021 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட loi Montagne  எனும் மலைச்சட்டத்தின் கீழ் இது முதல் கட்டமாக 175 யூரோக்கள் குற்றப்பணம் செலுத்தவேண்டிய குற்றமாகும்.


மின்சார பயன்பாட்டில் புதிய மாற்றம்!!

மின்சாரத்தினை 24 மணிநேரமும் பயன்படுத்துவோர், தற்போது பயன்பாட்டு நேரத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் பணத்தைச் சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இரவு 11 மணியில் இருந்து காலை 7 மணிவரையுள்ள நேரத்தில் ஏதேனும் 5 தொடர்ச்சியான மணிநேரங்களும்,

காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணிவரையான நேரத்தில் ஏதேனும் தொடர்ச்சியான 3 மணிநேரங்களும் (HP/HC)  (நெருக்கடியான உச்ச நேரம்/ நெருக்கடி இல்லாத நேரம்) என கருதப்பட்டு அதற்கு தகுந்தாற்போல் மின்கட்டணம் அறவிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நேரமாற்றம் ஒவ்வொரு நகரங்களுக்கும் மாறுபடும். உள்ளூர் மின்சார ஊழியர்கள் அதனை மாற்றத்துக்கு கொண்டுவருவார்கள். இன்று நவம்பர் 1 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது

வர்த்தக‌ விளம்பரங்கள்