நவம்பர் 1 முதல் மின்சார ஒப்பந்த மாற்றம் மற்றும் புதிய நேர அட்டவணை!!
31 ஐப்பசி 2025 வெள்ளி 23:24 | பார்வைகள் : 706
நவம்பர் 1 முதல் மின்சார ஒப்பந்தங்களில் பெரிய மாற்றம் அமுலாகிறது. இனி குறைந்த மின்சார நேரங்கள் இரவில் 23h முதல் 7h வரை (குறைந்தது 5 மணி நேரம் தொடர்ந்து) மற்றும் மதியம் 11h முதல் 17h வரை (அதிகபட்சம் 3 மணி நேரம்) இடம் பெறும். மேலும் கோடைகாலம் மற்றும் குளிர்காலத்திற்கு வேறு வேறு அட்டவணைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இந்த மாற்றமானது 1.45 கோடி heures pleines/heures creuses ஒப்பந்த வாடிக்கையாளர்களில் 1.1 கோடி பேரை பாதிக்கும். நீங்கள் 2025 நவம்பர் முதல் பாதிக்கப்படுபவர்களில் ஒருவராக இருந்தால், உங்கள் நிறுவனத்திலிருந்து முன்கூட்டியே ஒரு கடிதம் அல்லது மின்னஞ்சல் பெற்றிருக்க வேண்டும். அனைத்து மீட்டர்களையும் ஒரே நேரத்தில் மாற்ற முடியாததால், இந்த மாற்றம் 2025 நவம்பர் முதல் 2027 இறுதி வரை படிப்படியாக நடக்கும்.
இந்த மாற்றம், பிரெஞ்சு மக்களின் மின்சார பயன்பாட்டு பழக்கங்கள் மற்றும் சூரிய ஆற்றல் உற்பத்தியின் வளர்ச்சியால் உருவானது. மதிய நேரங்களில் மின்சாரம் அதிகமாகவும் மலிவாகவும் கிடைப்பதால், அதே நேரத்தில் பயன்பாட்டை ஊக்குவிக்க இது உதவும். அதிகாரிகள் இதனால் மின்சார நுகர்வு சமநிலைப்படும் என்றும், சிலருக்கு கட்டண கட்டுப்பாடுகள் கிடைக்கும் என்றும் கூறினாலும், நிபுணர்கள் அனைவரும் இது பொருளாதார ரீதியில் பெரிய சேமிப்பை தராது என எச்சரிக்கின்றனர்.
UFC-Que Choisir அமைப்பு, ஒரு குடும்பத்தின் மொத்த மின்சார பயன்பாட்டில் மூன்றில் ஒரு பங்கு குறைந்த மின்சார நேரங்களில் இருந்தால்தான் இந்த ஒப்பந்தம் லாபகரமாகும் என தெரிவித்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan