Paristamil Navigation Paristamil advert login

2 பிணைக் கைதிகள் உடலை ஒப்படைத்த ஹமாஸ் - அடையாளம் கண்ட இஸ்ரேல்

2 பிணைக் கைதிகள் உடலை ஒப்படைத்த ஹமாஸ் - அடையாளம் கண்ட இஸ்ரேல்

31 ஐப்பசி 2025 வெள்ளி 15:20 | பார்வைகள் : 406


காசாவில் இருந்து பெறப்பட்ட பிணைக் கைதிகள் உடலை இஸ்ரேல் அடையாளம் கண்டுள்ளது.

காசாவிலிருந்து மீட்கப்பட்ட இரண்டு பிணைக் கைதிகளின் உடலை ஹமாஸ் ஒப்படைத்துள்ள நிலையில், அவர்களை அதிகாரப்பூர்வமாக இஸ்ரேல் அடையாளம் கண்டுள்ளது.

பிணைக் கைதிகளின் உடல்கள் வியாழக்கிழமை செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஒப்படைக்கப்பட்ட பிணைக் கைதிகள் உடல்கள் 84 வயது அமிராம் கூப்பர் மற்றும் 25 வயது சஹார் பாருக் என்பதை உறுதிப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் கூப்பர் மற்றும் பாருக் குடும்பத்தினருக்கு இஸ்ரேலிய அரசாங்கம் ஆழ்ந்த இரங்கலையும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் காசாவில் இருந்து ஒப்படைக்கப்பட வேண்டிய மீதமுள்ள 11 இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பிணைக் கைதிகளின் உடலை விரைவாக ஒப்படைக்க வேண்டும் என்று இஸ்ரேலில் உள்ள பிணைக் கைதிகள் மற்றும் காணாமல் போன நபர்களுக்கான மன்றம் வலியுறுத்தியுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்