Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்தில் சமூக ஊடகங்கள் தொடர்பிலான கடுமையாக்கப்பட விதிகள்

சுவிட்சர்லாந்தில் சமூக ஊடகங்கள் தொடர்பிலான  கடுமையாக்கப்பட விதிகள்

31 ஐப்பசி 2025 வெள்ளி 11:06 | பார்வைகள் : 271


சுவிட்சர்லாந்தில் சமூக ஊடகங்கள் தொடர்பிலான விதிகள் கடுமையாக்கப்பட உள்ளன.

டிக்டாக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களுக்கான விதிகளை கடுமையாக்குவதற்கான புதிய மசோதா ஒன்றை ஃபெடரல் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், வெறுப்பு பேச்சு அல்லது துன்புறுத்தல் போன்ற சட்டவிரோத உள்ளடக்கங்கள் குறித்து பயனர்கள் புகாரளிப்பதை எளிதாக்க வேண்டும்.

அத்துடன், அத்தகைய கணக்குகளுக்கு எதிராக அவர்கள் நடவடிக்கை எடுக்கும்போது, அது குறித்து விளக்க வேண்டும்.

மேலும், இடுகைகள் எவ்வாறு தரவரிசைப்படுத்தப்படுகின்றன என்பது குறித்தும், சுவிஸ் தேசிய மொழிகளில் வாடிக்கையாளர் சேவையை வழங்குவது குறித்தும், உள்ளூர் பிரதிநிதியை நியமிப்பது குறித்தும் அவர்கள் இன்னும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

இதையெல்லாம் தாண்டி, இந்த விடயங்களை அமுல்படுத்துவதற்கான நிதிக்காக, சமூக ஊடகங்கள் ஒரு புதிய கண்காணிப்பு வரியையும் செலுத்தவேண்டும்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்