துபாய் ஆட்சியாளர் நடந்து செல்லும்போது குறுக்கே நுழைந்த பெண்
31 ஐப்பசி 2025 வெள்ளி 11:06 | பார்வைகள் : 890
துபாயின் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதம மந்திரியுமான ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் செய்த ஒரு செயலைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
சமீபத்தில், துபாய் ஆட்சியாளரான ஷேக் முகம்மது தன் பாதுகாவலர்கள் சூழ நடந்து சென்றுகொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, ஒரு பெண், யார் வருகிறார் என்று கவனிக்காமல் ஷேக் முகம்மது நடந்து செல்லும் வழியில் குறுக்கே நுழைந்துள்ளார்.
உடனே அவரது பாதுகாவலர்கள் பரபரப்பாகி அந்தப் பெண்ணைத் தடுக்க முயல, சட்டென தன் கையைக் காட்டி அவர்களைத் தடுத்து, அந்தப் பெண் தடையின்றி நடந்து செல்ல வழிவகை செய்கிரார் ஷேக் முகம்மது.
இந்த சம்பவத்தைக் காட்டும் வீடியோ ஒன்று இனையத்தில் வைரலாகியுள்ளது.
இதுதான் எங்கள் ஆட்சியாளர், எவ்வளவு தாழ்மை, என மக்கள் ஆளாளுக்கு ஷேக் முகம்மதுவை புகழ்கிறார்கள்.
அவர் எப்போதுமே இப்படித்தான், ரொம்ப எளிமையானவர் என்கிறார் ஒருவர். ஒருமுறை நாங்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தோம், ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்தவர் ஆர்வமாக எங்கள் விளையாட்டை ரசித்துக்கொண்டிருந்தார்.
பிறகுதான் கவனித்தோம், அது எங்கள் ஆட்சியாளர் ஷேக் முகம்மது என்று என்கிறார் அவர்.
இப்படி ஆளாளுக்கு ஷேக் முகம்மதுவைப் புகழ, சிலர் அந்தப் பெண்ணை திட்டவும் செய்துள்ளார்கள். அக்கம்பக்கம் என்ன நடக்கிறது என்று கூட பார்க்காமலா ஒரு பெண் நடந்து செல்வார் என்கிறார் ஒருவர்.
இந்த வைரல் வீடியோ குறித்து அறிந்தபிறகுதான் தான் என்ன செய்துள்ளோம் என்பது அவருக்குத் தெரியப்போகிறது, ஷாக் ஆகப்போகிறார் அவர் என்கிறார் இன்னொருவர்!
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan