Paristamil Navigation Paristamil advert login

லூவர் கொள்ளை: .மேலும் ஐவர் கைது! - நகைகள் கிடைக்கவில்லை!!

லூவர் கொள்ளை: .மேலும் ஐவர் கைது! - நகைகள் கிடைக்கவில்லை!!

30 ஐப்பசி 2025 வியாழன் 14:34 | பார்வைகள் : 958


லூவர் அருங்காட்சியகத்தில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று பத்து நாட்களுக்கும் மேலாகும் நிலையில், இதுவரை கொள்ளையிடப்பட்ட நகைகளில் இருந்து ஒரு சிறு பகுதிகூட மீட்கப்படவில்லை.

முன்னதாக இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். ஒக்டோபர் 19 ஆம் திகதி காலை, லூவர் அருங்காட்சியகத்துக்குள் நுழைந்த கொள்ளையர்கள் நால்வர் 8 நிமிடங்களுக்குள்ளாக €88 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள எட்டு நகைகளைக் கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றனர்.

மரபணு சான்றுகளை அடிப்படையாக கொண்டு புதிதாக ஐவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பரிஸ் புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். குறிப்பாக Seine-Saint-Denis மாவட்டத்தில் இருந்து நால்வர் கைது செய்யப்பட்டனர்.

நகைகள் மீட்கப்பட்டால் அவர்களுக்கு குறைந்த பட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்