ஓடி (découvert) இனி தானாக அனுமதிக்கப்பட மாட்டாது!!
29 ஐப்பசி 2025 புதன் 20:57 | பார்வைகள் : 1860
நவம்பர் 20 முதல் வங்கி கணக்கில் இருக்கும் பணத்திற்கு மேலதிகமாக கடன் எடுக்கும் வசதி (découvert -ஓடி) தானியங்கி முறையில் அனுமதிக்கப்பட மாட்டாது. புதிய ஐரோப்பிய விதிப்படி, ஓடி மற்றும் காசோலை வசதிகள் இனி நுகர்வோர் கடன் (crédit à la consommation) வகையில் அடங்கும்.
வங்கிகள், 200 யூரோக்களுக்கு மேல் புதிய ஓடி (découvert) வழங்குவதற்கு முன், வாடிக்கையாளர் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பீடு செய்ய வேண்டும். 200 யூரோக்களுக்கு கீழ் உள்ள ஓடிக்கு எளிய நடைமுறை போதுமானது, ஆனால் 200 யூரோக்களுக்கு மேல் ஓடி வழங்குவதற்கு வருமானம் மற்றும் செலவுகளை ஆராயும் விரிவான ஆய்வு தேவைப்படும். ஏற்கனவே ஓடி அனுமதி பெற்றவர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படமாட்டார்கள், ஆனால் அவர்கள் தங்களின் ஓடி வரம்பை அதிகரிக்க விரும்பினால் புதிய விதிகள் அவர்களுக்கும் பொருந்தும்.
வங்கிகள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட நியாயமான காரணங்களின் அடிப்படையில் மட்டுமே ஒரு வாடிக்கையாளரின் ஓடி அனுமதியை ரத்து செய்ய முடியும், மேலும் அதற்கு 30 நாட்களுக்கு முன்பாக அறிவிக்கபட வேண்டும் என்று la Banque de France தெளிவுபடுத்தியுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan