ரோய்சி RER பயணிகளுக்கு இனி அபராதம் இல்லை!!
29 ஐப்பசி 2025 புதன் 15:48 | பார்வைகள் : 1364
அக்டோபர் மாத தொடக்கம் முதல், ரோய்சி சார்ல்-து-கோல் (Roissy Charles-de-Gaulle) விமான நிலையத்துக்கு RER B மூலம் பயணம் செய்யும் போது 13 யூரோ “விமான நிலைய கூடுதல் கட்டணம்” செலுத்தாத பயணிகளுக்கு இனி 35 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படமாட்டார்கள். அதற்கு பதிலாக, Île-de-France Mobilités (IDFM) மற்றும் SNCF இணைந்து, நல்லநம்பிக்கையுள்ள பயணிகளுக்கு கட்டணத்தை சரிசெய்யும் முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த மாற்றம் Fnaut என்ற பயணிகள் சங்கத்தின் நீண்ட போராட்டத்தின் விளைவாகும். ரோய்சி நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் இல்லாததால், குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் சில பரிஸியர்கள் விதிகளை அறியாமலே தவறு செய்கின்றனர்.
IDFM தெரிவித்ததாவது, புதிய இயந்திரங்கள் விரைவில் நிறுவப்படும் வரை 2.50 யூரோ சாதாரண டிக்கெட்டுடன் பயணிக்கும் நபர்களுக்கு அபராதமின்றி கட்டணம் சரிசெய்யப்படும்.
Orly விமான நிலையத்தில் இத்தகைய பிரச்சினை இல்லை, ஏனெனில் அங்கு டிக்கெட் இயந்திரங்கள் உள்ளன. Fnaut இதை வரவேற்றாலும், 13 யூரோ கட்டணத்தை 10.50 யூரோவாகக் குறைக்க வேண்டும் என்று கோருகின்றனர், ஏனெனில் பயணிகள் ஏற்கனவே 2.50 யூரோ RER கட்டணத்தை செலுத்தியுள்ளனர். மேலும், விமான நிலைய டிக்கெட்டுடன் பஸ் அல்லது டிராமில் பயணிக்க அனுமதி அளிக்கவும் அவர்கள் கோருகின்றனர், இது தற்போது சாத்தியமில்லை.
மேலும் Navigo Liberté + குறைந்த கட்டண திட்டத்தை விமான நிலைய பயணங்களுக்கும் விரிவாக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan