Paristamil Navigation Paristamil advert login

அதிகார பேராசை, பொய் வாக்குறுதிகள்; இண்டி கூட்டணி தேர்தல் அறிக்கையை விளாசிய நிதிஷ்

அதிகார பேராசை, பொய் வாக்குறுதிகள்; இண்டி கூட்டணி தேர்தல் அறிக்கையை விளாசிய நிதிஷ்

29 ஐப்பசி 2025 புதன் 10:02 | பார்வைகள் : 148


பொய்யான வாக்குறுதிகளை அளித்து பீஹார் இளைஞர்களை தேஜஸ்வி யாதவ் முட்டாளாக்குவதாக முதல்வர் நிதிஷ் குமார் குற்றம்சாட்டி உள்ளார்.

பீஹார் சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இளைஞர்களுக்கு அரசு வேலை, மகளிருக்கு உதவித்தொகை என பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்த அறிவிப்புகள் அனைத்தும் பொய்யானவை, இளைஞர்களை முட்டாளாக்குபவை என்று முதல்வர் நிதிஷ்குமார் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;

மாநிலத்தை 15 ஆண்டுகளாக கொள்ளையடித்தவர்கள் இப்போது இளைஞர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றனர். அவர்கள் ஆட்சியில் இருந்த போது வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை.

இப்போது, அதிகாரத்தின் மீது பேராசை இருக்கிறது. அதனால் தான் இதுபோன்ற ஏமாற்றும் அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். எங்களின் அரசானது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது. யார் தங்களுக்கான வேலை செய்கிறார்கள் யார் பொய்களை சொல்கிறார்கள் என்பது பீஹார் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

இவ்வாறு நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்