Paristamil Navigation Paristamil advert login

எரிசக்தி கட்டணங்களை செலுத்த முடியாமல் திணறும் மக்கள்! !

எரிசக்தி கட்டணங்களை செலுத்த முடியாமல் திணறும் மக்கள்! !

28 ஐப்பசி 2025 செவ்வாய் 14:49 | பார்வைகள் : 640


மின்சாரம், சமையல் மற்றும் வெப்பமூட்டிக்கான எரிவாயு போன்ற எரிசக்தி கட்டணங்களை செலுத்துவதற்கு பிரெஞ்சு மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். கட்டண அதிகரிப்பு இதில் பெருமளவில் தாக்கம் செலுத்துகிறது.

பிரெஞ்சு மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த சிரமத்தை எதிர்கொள்ளுகின்றனர். அவர்களது குறைந்த வருமானமும், எரிசக்தி கட்டண உயர்வும் இதற்கு பிரதான காரணமாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 15% சதவீதமா மக்கள் இந்த சிரமத்தை எதிர்கொண்ட நிலையில், தற்போது மூன்றில் ஒரு பங்கு மக்களாக (36% சதவீதமானோர்)  இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறிப்பாக கட்டண உயர்வினால் அவர்கள் குளிர்காலங்களில் வெப்பமூட்டிகளை பூரணமாக பயன்படுத்துவதில்லை எனவும், பகுதியாகவோ, அல்லது மிகவும் சிக்கனமாகவோ பயன்படுத்துகின்றனர்.

கடந்த வருடத்துக்கான வரவுசெலவு திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ‘எரிசக்திக்கான கொடுப்பனவுகள்’ வழங்குவதில் பல மாத தாமதம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலை மேலும் பல வழிகளில் மக்களை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்