வேலைதேடுபவர்களின் எண்ணிக்கை 3ஆம் காலாண்டில் 1,6% அதிகரிப்பு!!
28 ஐப்பசி 2025 செவ்வாய் 14:29 | பார்வைகள் : 628
பிரான்சில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 1,6% அதிகரித்துள்ளது என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வகை A (எந்த வேலைவுமின்றி இருப்பவர்கள்) பிரிவில் பதிவு செய்யப்பட்டவர்கள் தற்போது 3,26 மில்லியன் பேராக உள்ளனர். மொத்தம் A, B, C பிரிவுகளையும் சேர்த்து பார்த்தால், வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை 5,7 மில்லியனாக உள்ளது. இந்த உயர்வு, RSA பெறுபவர்கள் மற்றும் வேலை நுழைவு திட்டங்களில் உள்ள இளைஞர்கள் தானாகவே France Travail அமைப்பில் பதிவு செய்யப்பட்டதாலும் ஏற்பட்டுள்ளது.
வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கான மற்றொரு காரணம், புதிய தண்டனை விதிகள் ஜூன் மாத தொடக்கத்தில் அமுல் பெற்றதன் விளைவாக பதிவு நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது என்பதாகும். சராசரியாக, மூன்றாவது காலாண்டில் மாதத்திற்கு 2 000 பேர் மட்டுமே நீக்கப்பட்டனர், இது 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மாதத்திற்கு 45 000 பேர் இருந்ததை ஒப்பிடுகையில் மிகக் குறைவாகும். இதுவே வேலை இழந்தவர்களின் எண்ணிக்கையை செயற்கையாக உயர்த்தியுள்ளது.
இந்த மாற்றங்கள் இல்லையெனில், வகை A பிரிவில் பதிவு செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1% குறைந்திருக்கும் என்று தொழிலாளர் அமைச்சகம் கூறுகிறது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த தரவுகளே தொழில் சந்தையின் நிஜ நிலையை மிகச்சரியாக பிரதிபலிக்கின்றன.


























Bons Plans
Annuaire
Scan