Paristamil Navigation Paristamil advert login

RER C ரயிலில் பாலியல் வன்முறை முயற்சி : சந்தேக நபர் கைது!!

RER C ரயிலில் பாலியல் வன்முறை முயற்சி : சந்தேக நபர் கைது!!

27 ஐப்பசி 2025 திங்கள் 21:06 | பார்வைகள் : 788


அக்டோபர் 16 அன்று RER C ரயிலில் 26 வயது பிரேசில் பெண் மீது தாக்குதல் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு தற்காலிக சிறையில் வைக்கப்பட்டுள்ளார். 

சமூக வலைதளங்களில் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு குற்றவாளி ஓடிச் செல்லும் காட்சி கொண்ட ஒரு வீடியோ வெளியானதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது. ஜோர்டானா டயஸ் (Jhordana Dias) என்ற பாதிக்கப்பட்ட பெண் தனது அனுபவத்தை பிரேசிலிய ஊடகத்திற்கு பகிர்ந்துள்ளார்; அவருடைய குரலைக் கேட்ட மற்றொரு பெண் பயணி உதவியதால் குற்றவாளி தப்பிச் சென்றார்.

அந்த நபர் வில்ல்நூவ்-ல-ருவா (Villeneuve-le-Roi) நிலையத்தில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வீடியோ வெளியான பின் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இதே நபர் தான் என்று கூறி மேலும் இரண்டு பெண்கள் RER C ரயிலில் நடந்த பாலியல் வன்முறை சம்பவங்களைப் பற்றி சாட்சி அளித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபர் “வாக்குவாதம் நடந்தது” என்று ஒப்புக்கொண்டாலும், பாலியல் வன்முறை முயற்சி செய்ததை மறுத்துள்ளார். அவர் முன்பு எந்த குற்றப்பதிவும் இல்லாதவர் என்று கிரேத்தெய் (Créteil) நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்