பரிஸில் நச்சு பூச்சிக்கொல்லி தாக்கம்: நால்வர் மருத்துவமனையில்!
27 ஐப்பசி 2025 திங்கள் 16:07 | பார்வைகள் : 789
பரிஸில் தடை செய்யப்பட்ட ஸ்நைப்பர் 1000 (Sniper 1 000) என்ற மிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லியை பயன்படுத்தியதால் நால்வர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாவது வட்டாரத்தில் நடந்த இந்தச் சம்பவம், 2025 ஜனவரி மாதத்திலிருந்து இதே பூச்சிக்கொல்லி காரணமாக ஏற்பட்ட 24வது தீயணைப்பு படை தலையீடாகும். படுக்கை பூச்சிகளின் அச்சம் அதிகரித்துள்ளதால் மக்கள் இந்தத் தடை செய்யப்பட்ட பொருளை மறைமுகமாக வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
ஸ்நைப்பர் 1000 சீனாவில் தயாரிக்கப்பட்டு நைஜீரிய நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது, ஆனால் பிரான்சில் பத்து ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமாக சந்தைகளில் விற்கப்படுவதுடன், அதன் நச்சு வாயுக்கள் கடுமையான சுவாசக் கோளாறு, தலைவலி மற்றும் வாந்தியை ஏற்படுத்துகின்றன.
2023 முதல் உயிரிழப்புகள் எதுவும் இல்லையெனினும், ஆபத்துகள் இன்னும் மிகுந்ததாகவே உள்ளன என்று பரிஸ் காவல் துறை எச்சரித்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan