பரிசில் மீண்டும் கொள்ளை முயற்சி! - இரு கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்!!
27 ஐப்பசி 2025 திங்கள் 14:48 | பார்வைகள் : 5494
லூவர் அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன்னர், பரிசில் மற்றுமொரு கொள்ளைச் சம்பவ முயற்சி இடம்பெற்றுள்ளது.
பரிஸ் 3 ஆம் வட்டாரத்தில் உள்ள Mikael நகைக்கடையில் இன்று ஒக்டோபர் 27 திங்கட்கிழமை காலை கொள்ளை முயற்சி இடம்பெற்றது. Rue Réaumur வீதியில் உள்ள குறித்த நகைக்கடையில் காலை 9 மணி அளவில் இரு கொள்ளையர்கள் மஞ்சள் மேலங்கியுடன் பணியாட்கள் போல் வேடமணிந்து கடைக்குள் நுழைய முற்பட்டனர்.
அவர்களது தோற்றத்தில் சந்தேகம் கொண்ட கடையின் காவலாளி, உடனடியாக கடையின் முகப்பு கதவை ‘ரிமோட்’ மூலம் பூட்டியுள்ளார். அவர்களை உள்ளே அனுமதிக்காமல், ‘இங்கு எந்த திருத்தப்பணிகளும் இல்லை. யாரும் அழைக்கப்படவில்லை!’ என தெரிவித்துள்ளார்.
அதை அடுத்து, அவர்கள் இருவரும் கதவினை வலுக்கட்டாயமாக தள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதனை உடைக்க முடியாமல் போயுள்ளது. அதை அடுத்து, காவல்துறையினர் எச்சரிக்கப்பட்டு, அவர்கள் அழைக்கப்பட்டனர்.
அதற்குள்ளாக கொள்ளையர்கள் இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் Rue de Turbigo வீதி வழியாக தப்பி ஓடியதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan