லூவர் நகைக் கொள்ளையில் டி.என்.ஏ மூலம் பிடிபட்டுள்ள இரு குற்றவாளிகள் !!
26 ஐப்பசி 2025 ஞாயிறு 13:56 | பார்வைகள் : 974
லூவரில் நடந்த அதிர்ச்சியூட்டும் நகைக் கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு ஒரு வாரம் கழித்து, இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பரிஸ் குற்றப்பிரிவு (BRB) விசாரணையாளர்கள் சனிக்கிழமை இரவில் அவர்களை கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சென்-செயின்-டெனிஸ் பகுதியில் வசிப்பவர்களாகவும், முன்பு நகைக் கடை கொள்ளைகளில் ஈடுபட்டவர்களாகவும் அறியப்பட்டுள்ளனர். குற்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டி.என்.ஏ மூலம் அவர்களை அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் ஒருவர் ரொய்சி-சார்ல்-து-கோல் விமான நிலையத்தில் அல்ஜீரியா செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது காவல் விசாரணை 96 மணி நேரம் வரை நீடிக்கலாம். விசாரணையாளர்கள் திருடப்பட்ட பிரான்ஸ் அரச மரியாதை நகைகள் மற்றும் இன்னும் தேடப்படும் இரு குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். கொள்ளையில் எட்டு அரிய ஆபரணங்கள் திருடப்பட்டமை நாம் அறிந்தவையே.


























Bons Plans
Annuaire
Scan