விமானத்தை தேடி அழிக்கும் ஏவுகணை.. யுக்ரேனுக்கு வழங்கும் பிரான்ஸ்!!
26 ஐப்பசி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 541
விமானத்தை தேடி அழிக்கும் Aster வகை ஏவுகணைகளும், சுப்பர் சொனிக் Mirage விமானத்தையும் யுக்ரேனுக்கு பிரான்ஸ் வழங்க உள்ளது.
ரஷ்ய - யுக்ரேன் யுத்தத்தில் யுக்ரேன் சார்பாக நிற்கும் பிரான்ஸ் இதுவரை மூன்று சுப்பர் சொனிக் Mirage விமானங்களை வழங்கியுள்ளது. தற்போது மேலும் மூன்று விமானங்களை பிரான்ஸ் வழங்க உள்ளது.
அத்தோடு, விமானங்களை தேடி அழிக்கும் நவீன Aster ஏவுகணைகளை சிலவற்றையும் பிரான்ஸ் வழங்க உள்ளது.
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று முன்தினம் ஒக்டோபர் 24, வெள்ளிக்கிழமை, யுக்ரேனிய ஜனாதிபதி செலன்ஸ்கியுடன் வீடியோ அழைப்பினூடாக உரையாடினார். அதன்போதே 'வரும் நாட்களில் இந்த ஏவுகணைகள், விமானங்களை' வழங்க உள்ளதாக உறுதியளித்தார்.
'ரஷ்யா மீது அழுத்தங்களை அதிகரிப்பதும், யுக்ரேனுக்கு உதவிகளை வழங்குவதும் இந்த சந்தர்ப்பத்தில் அவசியமாகும்' என மக்ரோன் தெரிவித்தார்.


























Bons Plans
Annuaire
Scan