குழந்தைகளுக்கான பராமரிப்பு தொகை பெறுபவர்களுக்கு பகுதி வரிவிலக்கு!!
25 ஐப்பசி 2025 சனி 22:04 | பார்வைகள் : 639
2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குழந்தைகளுக்கான ஜீவனாம்சம் தொகை (pension alimentaire) பெறுபவர்களுக்கு பகுதி வரிவிலக்கு வழங்கும் திருத்தச் சட்டம் தேசிய சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை, ஜீவனாம்சம் வழங்கும் நபர்கள் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், பெறுபவர்கள் வரி செலுத்த வேண்டியிருந்தது.
புதிய திருத்தம் இதை மாற்றி, பெறுபவர்களுக்கு 4,000 யூரோ வரை (ஒரு குழந்தைக்கு) வரிவிலக்கு வழங்குகிறது, மேலும் வழங்குபவர்கள் அந்தத் தொகைக்கு வரி செலுத்த வேண்டும். பசுமை கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாரி-ஷார்லோட் கரின் (Marie-Charlotte Garin) முன்மொழிந்த இந்த சட்டம், இடதுசாரிகள், தேசிய ராலி மற்றும் சில மக்ரோனியர்களின் ஆதரவில் அரசாங்கத்தின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை “இரட்டை அநீதியை” நீக்கும் என பசுமை கட்சி தலைவர் சிரியெல் ஷாத்லேன் (Cyrielle Chatelain) தெரிவித்துள்ளார், ஏனெனில் பெரும்பாலான (97%) பெறுபவர்கள் பெண்களே, மேலும் அவர்கள் ஏற்கனவே குறைந்த அளவு தொகை பெறுகிறார்கள்.
திருத்தத்தின் மூலம் அரசு ஆண்டுக்கு சுமார் 450 மில்லியன் யூரோ வரை பற்றுச்செலவை குறைக்க முடியும் என்றும், இது புகையிலை வரி அதிகரிப்பதன் மூலம் நிதியளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் நிதி அமைச்சர் அமிலி டெ மொந்த்சலின் (Amélie de Montchalin) இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார், இது உயர் வருமானம் உள்ள பெண்களுக்கு அதிக நன்மை தரும் என வாதிட்டுள்ளார்.

























Bons Plans
Annuaire
Scan