சார்கோசிக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு கைதிகள்!!
25 ஐப்பசி 2025 சனி 15:10 | பார்வைகள் : 546
பரிஸ் லா சான்தே (la Santé) சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள், முன்னாள் குடியரசுத் தலைவர் நிக்கோலா சர்கோசிக்கு மரண மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இலியஸ் பி. (Ilies B) என்பவர், “நாங்கள் கடாபியை பழிவாங்கப்போகிறோம், சார்கோ பற்றி எல்லாம் தெரியும்” என கூறி, மிரட்டல் விடுக்கும் வீடியோவை டிக்டாக்கில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. அவர் சட்டவிரோதமாக தொலைபேசி வைத்திருந்ததற்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அவருக்கு உதவியதாகக் கூறப்படும் அஞ்சே ஓ (Ange O) என்பவர், தனது தொலைபேசியை வீடியோ பதிவு மற்றும் வெளியீட்டிற்காக பயன்படுத்த அனுமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 45 000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படலாம்.
நிக்கோலா சர்கோசி தற்போது 2007 தேர்தல் நிதி விவகாரத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்; அவர் அதற்கு மேல்முறையீடு செய்துள்ளார்.

























Bons Plans
Annuaire
Scan