Paristamil Navigation Paristamil advert login

« Évadez-vous au Louvre » சுலோகத்தை மாற்றிய லூவர்!!

« Évadez-vous au Louvre » சுலோகத்தை மாற்றிய லூவர்!!

25 ஐப்பசி 2025 சனி 07:00 | பார்வைகள் : 707


லூவர் அருங்காட்சியகத்தில் கொள்ளையிடப்பட்ட நாளில் இருந்து, பொதுமக்களின் பார்வை லூவர் மீது குவிந்துள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் மிகவும் ஆச்சரியமான ஒன்றாக மாறியுள்ளது. இத்தனை பாதுகாப்பு கொண்ட லூவரில், ஏழு நிமிடங்களுக்குள் இந்த கொள்ளை இடம்பெற்றுள்ளமை பொதுமக்களிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை இடம்பெற்ற மூன்றாவது நாள் பொதுமக்களுக்கு லூவர் திறக்கப்பட்டது. முன்னர் எப்போதும் இல்லாத அளவு அங்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து உள் நுழைந்து லூவரை சுற்றி சுற்றி பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், லூவர் அருங்காட்சியகத்தின் இணையத்தள முகப்பில் உள்ள சுலோகத்தை மாற்றி அமைத்து லூவர் மேலும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் "Louvre Museum” என இருந்த சுலோகத்தை தற்போது « Évadez-vous au Louvre » என மாற்றியுள்ளது.

“லூவருக்குள் தப்பிச் செல்லுங்கள்” என பொருட்படும் படியாக இந்த வசனத்தை முகப்பில் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த வசனம் பொதுமக்களை மேலும் வியப்புக்குள்ளாக்கியதோடு, பார்வையாளர்களை மேலும் கவர்ந்து இழுக்கிறது.

கொவிட் 19 காலத்துக்கு முன்பாக 2019 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பார்வையாளர்களைச் சந்தித்த லூவர், மீண்டும் அதேபோன்ற ஒரு பார்வையாளர்கள் எண்ணிக்கையை தொடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்