ஈராக்கில் பிரான்ஸ் தூதரக சர்ச்சை : யூதச்சொத்து பறிமுதல்!!
24 ஐப்பசி 2025 வெள்ளி 14:58 | பார்வைகள் : 638
ஈராக்கில் உள்ள பிரான்ஸ் தூதரகம், யூதக் குடும்பமான லாவி சகோதரர்களின் சொத்து தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளது.
1940களில் கனடாவுக்கு குடிபெயர்ந்த அவர்கள், பக்தாத்தில் உள்ள தங்கள் கட்டிடத்தை 1965ல் பிரான்ஸ் தூதரகத்திற்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர். ஆனால் பின்னர் ஈராக் அரசு யூதர்கள் வெளியேறிய பிறகு அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தது. இதனால் பிரான்ஸ் அரசு தொடர்ந்து ஈராக் அதிகாரிகளுக்கு வாடகை செலுத்தியுள்ளது, ஆனால் உண்மையான உரிமையாளர்களுக்கு அல்ல.
வழக்கறிஞர் ஜான்-பியர் மின்யார் தற்போது பிரான்ஸ் நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார், 21.5 மில்லியன் யூரோவை வாடகைத் தொகை மற்றும் நஷ்டஈடாக கோரியுள்ளார். அவர் கூறுவதாவது, “பிரான்ஸ் அரசு யூதக் குடும்பத்தின் சொத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துகிறது” என்பதுதான். மின்யார் பிரான்ஸ் அரசு ஈராக் உடன் நல்லுறவைப் பயன்படுத்தி, உரிமையாளர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan