Togoஇல் ஐந்து பிரஞ்சு குடிமக்கள் பலி : பிரான்ஸ் தூதரகம் அறிவிப்பு!!

23 ஐப்பசி 2025 வியாழன் 21:23 | பார்வைகள் : 1012
ரோகோவில் (Togo) மனிதாபிமான பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து பிரான்ஸ் குடிமக்கள் 21 அக்டோபர் அன்று பேருந்து விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்று பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து யோமாபுவா (Yomaboua) பகுதியில் டயர் வெடிப்பால் ஏற்பட்டுள்ளது.
வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததாக ரோகோ உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் லயன்ஸ் கிளப்ஸ் உறுப்பினர்கள் ஆவார்கள்; அவர்கள் ஒரு மகப்பேறு மருத்துவமனை அமைக்கும் பணிக்காக அங்கு சென்றிருந்தனர்.
இந்த விபத்தில் மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர், அதில் ஆறு பேர் பிரெஞ்சு குடிமக்களாகும். லயன்ஸ் கிளப்ஸ் தலைவர் மரி-க்ளோட் பேப்பே (Marie-Claude Pepe) கூறியதாவது, குழு பெனினுக்கு (Bénin) செல்லும் வழியில், டயர் வெடித்து பேருந்து பள்ளத்தில் விழுந்துள்ளது. அவர்கள் பெனினின் வடமேற்குப் பகுதியில் உள்ள ச்சன்தாங்கா (Tchantanga) என்ற இடத்தில் மகப்பேறு மருத்துவமனையைத் திறக்கப் போகும் வழியில் இருந்துள்ளனர்.