Paristamil Navigation Paristamil advert login

செபஸ்தியான் லெகோர்னு அரசாங்கத்தில் உள்ள ஆறு "லே ரெப்புப்ளிக்கன்" கட்சி அமைச்சர்கள் கட்சியிலிருந்து இடைநீக்கம்!!

செபஸ்தியான் லெகோர்னு அரசாங்கத்தில் உள்ள ஆறு

23 ஐப்பசி 2025 வியாழன் 15:39 | பார்வைகள் : 727


செபஸ்தியான் லெகோர்னு அரசாங்கத்தில் உள்ள ஆறு லே ரிப்புப்ளிக்கன் (Les Républicains) கட்சி அமைச்சர்கள் 

  1. அன்னி ஜெனிவார்ட் (Annie Genevard-விவசாயம்), 
  2. ரஷிதா தாத்தி (Rachida Dati -கலாச்சாரம்), 
  3. பிலிப் தபரோ (Philippe Tabarot -போக்குவரத்து), 
  4. வின்சென் ஜீன்ப்ரூன் (Vincent Jeanbrun - வீடமைப்பு), 
  5. செபஸ்தியான் மார்டின் (Sébastien Martin-தொழில்) 
  6. நிக்கோலா போரிசியேர் (Nicolas Forissier-வெளிநாட்டு வர்த்தகம்)  

கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் நிர்வாகம், இந்த அமைச்சர்கள் இனி லே ரெப்புப்ளிக்கன் உறுப்பினர்களாக கருதப்படமாட்டார்கள் என்றும், அரசாங்கத்தில் தொடர்வது கட்சியின் சுயாதீனக் கொள்கைகளை மீறுவதாகும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த முடிவு, லே ரெப்புப்ளிக்கன் கட்சியில் நீண்டநாள் உள்நெருக்கடியை வெளிப்படுத்துகிறது. செபஸ்தியான் லெகோர்னுவின் முதல் அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்தே கட்சியில் கருத்து வேறுபாடுகள் தீவிரமாகி, ப்ருனோ ரெட்டையோ உள்ளிட்ட தலைவர்கள் அரசாங்க பங்கேற்பை எதிர்த்தனர். கட்சியின் வாக்கெடுப்பில் இரண்டாவது லெகோர்னு அரசாங்கத்தில் இணைவதை மறுத்திருந்தாலும், சில அமைச்சர்கள் அதில் சேர்ந்ததால் இந்த இடைநீக்கம் தவிர்க்க முடியாததாக அமைந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்