பெஞ்சமின் புயல் காரணமாக பலத்த காற்று மற்றும் மழை எச்சரிக்கை!!

22 ஐப்பசி 2025 புதன் 22:41 | பார்வைகள் : 527
பெஞ்சமின் புயல் புதன்கிழமை இரவு முதல் வியாழன் வரை பிரான்சின் பல பகுதிகளில் பலத்த காற்றும், கனமழையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Corrèze மாகாணம் முதலில் மழை மற்றும் வெள்ளத்துக்காக orange- எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பின்னர் Cotentin, Puy-de-Dôme, கடற்கரை மாகாணங்கள் மற்றும் Hauts-de-France பகுதிகள் காற்று காரணமாக orange எச்சரிக்கையில் விடப்பட்டுள்ளது.
வியாழனன்று காலை 4 மணி முதல் சில கடற்கரை மாகாணங்களில் அலை-தோய்ந்த வெள்ளத்துக்கான எச்சரிக்கையும் (vague-submersion) செயல்படுத்தப்படும்.
இந்த புயல் ஒரு "மெட்டியோரொலஜிக்கல் பாம்" « bombe météorologique » என்றழைக்கப்படும் வானிலை நிகழ்வாகும். இது பயமுறுத்தும் பெயராக தோன்றினாலும், இது மிகவும் பரந்த பருவகாலங்களில் நிகழக்கூடிய இயற்கை சம்பவமாகும்.
இது 1987 மற்றும் 1999 போன்ற பெரிய புயல்களைப்போல இல்லாவிட்டாலும், காற்றின் வேகம் 130 km/h வரை அதிகரிக்கலாம். மரங்கள் விழும் அபாயம், ஆறுகளின் நீர்மட்டம் உயர்வது போன்ற விளைவுகள் ஏற்படக்கூடியதால் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.