லூவ்ர் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பீடு சுமார் 88 மில்லியன் யூரோக்கள்!!

21 ஐப்பசி 2025 செவ்வாய் 21:54 | பார்வைகள் : 1155
எட்டு இலங்கை நீலக்கல் மற்றும் 631 வைரங்களால் ஆன ஒரு நெக்லஸ், 32 மரகதங்கள் மற்றும் 1,138 வைரங்கள் கொண்ட மற்றொரு தொகுப்பு, மொத்தம் 212 முத்துக்கள் மற்றும் 1,998 வைரங்கள் கொண்ட ஒரு தலைப்பாகை... திருடப்பட்ட எட்டு நகை திருட்டில் ஏற்பட்ட நஷ்டம் சுமார் 88 மில்லியன் யூரோக்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நகைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், அவற்றின் பண மதிப்பை ஒப்பிட முடியாது என்று பரிஸ் அரசு வழக்கறிஞர் லாரு பெக்குவோ (Laure Beccuau) தெரிவித்துள்ளார். திருடர்கள் நகைகளை உருக்க முயன்றால் அந்த மதிப்பை பெற முடியாது என்றும், இது மிக மோசமான யோசனை எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த திருட்டு நடந்த இடத்தில் நால்வர் காணப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு உதவியாக ஒரு குழு இருந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒரு போலி இடமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது.