Paristamil Navigation Paristamil advert login

ஸ்ம்ரிதி மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு- நடைபெற இருந்த திருமணம் ஒத்திவைப்பு

 ஸ்ம்ரிதி மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு-  நடைபெற இருந்த திருமணம் ஒத்திவைப்பு

24 கார்த்திகை 2025 திங்கள் 10:02 | பார்வைகள் : 101


இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனாவிற்கு இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், அவரது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்ம்ரிதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.

இதற்காக சாங்லியின் சாம்டோலில் உள்ள மந்தனாவின் பண்ணை வீட்டில் ஏற்பாடுகள் நடைபெற்றன. அப்போது ஸ்ம்ரிதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் உடனே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தியைக் கேட்டதும் ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) மற்றும் அவரது குடும்பத்தினரும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்ததாக குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற இருந்த ஸ்ம்ரிதி மந்தனாவின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்