சிந்து பகுதி இந்தியாவுக்கு சொந்தமாகலாம்: ராஜ்நாத் சிங் பேச்சு
24 கார்த்திகை 2025 திங்கள் 09:01 | பார்வைகள் : 822
சிந்து பகுதி இன்று இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இல்லாமல் இருக்கலாம். யாருக்கு தெரியும், நாளை அது இந்தியாவுடன் இணையலாம்,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
வலுக்கட்டாயம்
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பல ஆண்டுகளாக நமது அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களின் வீடு எரிக்கப்பட்டது. குழந்தைகள் கொல்லப்பட்டனர். மகள்களுக்கு தொந்தரவு கொடுக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகினர். மக்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர்.
சிலர் எப்படியோ அங்கிருந்து தப்பித்து, இந்தியாவுக்கு வந்துவிட்டனர். ஆனால், திருப்திபடுத்தும் அரசால், அவர்களுக்கு போதுமான சலுகைகள் வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட சமூகத்தின் ஓட்டு வங்கியை திருப்திபடுத்துவதற்காக அவர்கள் அவமானப்படுத்தப்பட்டனர்.
குடியுரிமை சட்டம்
ஆனால், அண்டை நாடுகளில் இருந்து வரும் ஒரு சிறப்பு வகுப்பினருக்கு அடைக்கலாம் வழங்கப்பட்டது. உண்மையிலேயே அதற்கு தகுதியான ஹிந்து சமூக மக்களுக்கு அவர்களுக்கு தகுதியான உரிமைகள் வழங்கப்படவில்லை. அவர்களின் துன்பங்கள் புரிந்து கொள்ளப்படவில்லை. ஆனால், அந்த வலியை யாராவது புரிந்து கொண்டனர் என்றால், அது பிரதமர் மோடி தான். அதனால் தான் குடியரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
நம்முடையவர்கள்
பாஜ மூத்த தலைவர் அத்வானியை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். சிந்து பகுதியைச் சேர்ந்த ஹிந்துக்கள், குறிப்பாக அவரது தலைமுறையைச் சேர்ந்தவர்கள், இந்தியாவில் இருந்து சிந்து பிரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவில்லை என அத்வானி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிந்துவில் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் உள்ள ஹிந்துக்கள் சிந்து நதியை புனிதமாக கருதினர். இன்று சிந்து நிலம் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாகரீக ரீதியாக எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும். நிலத்தை பொறுத்தவரை எல்லைகள் மாறலாம். யாருக்கு தெரியும், சிந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பலாம். சிந்து நதியை புனிதமாக கருதும் சிந்து மக்கள் எப்போதும் நம்முடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் எங்கிருந்தாலும் நம்முடையவர்களாக இருப்பார்கள். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan