ஒரு தலைவர்; 12 மாநாடுகள்: ஜி20 மாநாட்டில் தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் மோடி
24 கார்த்திகை 2025 திங்கள் 05:53 | பார்வைகள் : 108
ஜி20 மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதுவரை நடந்த ஜி20 மாநாட்டில், பிரதமர் மோடி 12 மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். அவர் தொலைநோக்கு பார்வையுடன் இதுவரை முன்வைத்த யோசனைகள் குறித்து ஒரு சிறப்பு அலசல்.
ஜி - 20 என்பது 20 பெரிய பொருளாதார நாடுகள் இணைந்த கூட்டமைப்பு. இந்த அமைப்பில், இந்தியா, அமெரிக்கா உட்பட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் இடம்பெற்றுள்ளன. கடந்த 2023ல், ஆப்ரிக்க யூனியனும் இதில் இணைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்தாண்டு டிசம்பரில் இருந்து ஓராண்டுக்கு இதன் தலைமை பொறுப்பு தென்னாப்ரிக்கா வசமானது. இந்த ஆண்டுக்கான மாநாடு, ஆப்ரிக்க கண்டத்தில் முதல்முறையாக தென் ஆப்ரிக்காவில் நடந்தது.
இந்த மாநாட்டில் பேசிய பிரதமர், நரேந்திர மோடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குழுக்களை எதிர்ப்பது உள்ளிட்ட யோசனைகளை அமைப் பிடம் முன்வைத்தார். இதுவரை நடந்த ஜி20 மாநாட்டில், பிரதமர் மோடி 12 மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். அதில் அவர் முன்வைத்த யோசனைகள் என்னென்ன?
2014ம் ஆண்டு
மாநாடு நடந்த இடம்: ஆஸ்திரேலியா (பிரிஸ்பேன்)
உலகளாவிய கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கைக்கான நிதி வெளிப்படைத்தன்மை வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
2015ம் ஆண்டு
துருக்கி (அன்டால்யா)
பயங்கரவாத நிதியுதவியை எதிர்ப்பதற்கான உலகளாவிய உத்திக்கு பாதுகாப்பு மற்றும் நிதி முன்மொழிவை பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.
2016ம் ஆண்டு
சீனா (ஹாங்சோ)
பொருளாதார சீர்திருத்தம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு உலகளாவிய நடவடிக்கை தேவை என பிரதமர் மோடி கூறியிருந்தார்.
2017ம் ஆண்டு
ஜெர்மனி (ஹாம்பர்க்)
சுகாதாரம், தொழில்நுட்பத்தில் முன்மொழியப்பட்ட சர்வதேச கூட்டணி, உலகளாவிய சுகாதார பாதுகாப்புக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
2018ம் ஆண்டு
அர்ஜென்டினா (பியூனஸ் அயர்ஸ்)
தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உலகளாவிய உள்கட்டமைப்பு வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.
2019ம் ஆண்டு
ஜப்பான் (ஒசாகா)
டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் உலகளாவிய கட்டமைப்பிற்கான முன்மொழிவை பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.
2020ம் ஆண்டு
சவுதி அரேபியா (ரியாத்)
மனித வாழ்க்கையின் வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை வேண்டும் என மோடி கூறியிருந்தார். இந்த மாநாட்டில் கோவிட் தொற்று காரணமாக வீடியோ கான்பரன்சில் மோடி பங்கேற்றார்.
2021ம் ஆண்டு
இத்தாலி (ரோம்)
சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலில் மாற்றம் கொண்டு வர, 'ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்' அணுகுமுறையை மோடி வலியுறுத்தினார்.
2022ம் ஆண்டு
இந்தோனேசியா (பாலி)
காலநிலை மாற்றத்திற்கான உலகளாவிய திட்டத்தை பிரதமர் மோடி முன்மொழிந்தார்.
2023ம் ஆண்டு
இந்தியா (புது டில்லி)
சீர்திருத்தம், டிஜிட்டல் மயமாக்கல், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு கட்டமைப்பு மற்றும் விசா திட்டம், ஆப்ரிக்க ஒன்றியத்தை நிரந்த உறுப்பினராக்க மோடி வலியுறுத்தி இருந்தார்.
2024ம் ஆண்டு
பிரேசில், ரியோ டி ஜெனிரோ
உலகளாவிய தெற்கின் ஒருங்கிணைப்பு வேண்டும் என்று கூறி ஒற்றுமையை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
2025ம் ஆண்டு
தென் ஆப்ரிக்கா (ஜோகன்னஸ்பர்க்)
போதைப்பொருளும் பயங்கரவாதமும் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துகின்றன. அதனால், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஒருங்கிணைந்த ஒரு முயற்சி தேவை.
மேலும் சில யோசனைகளும் உள்ளன. அதில் ஒன்று ஜி- 20 கீழ் உலக பாரம்பரிய அறிவு களஞ்சியம் உருவாக்குவது. அனைவரையும் உள்ளடக்கிய, நிலைத்து நிற்கும் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி யோசனைகளை அமைப்பிடம் முன்வைத்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan