Paristamil Navigation Paristamil advert login

சினிமா சிம்புவின் ‘அரசன்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட மாற்றம்!

சினிமா சிம்புவின் ‘அரசன்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட மாற்றம்!

22 கார்த்திகை 2025 சனி 13:49 | பார்வைகள் : 154


‘தக் லைஃப்’ படத்திற்கு பிறகு சிம்பு நடிக்க உள்ள திரைப்படம் தான் அரசன். சிம்புவின் 49வது படமான இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார். வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருக்கிறார். இந்த படமானது வடசென்னை படத்தின் யுனிவர்ஸாக உருவாக இருக்கிறது.

மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. அடுத்தது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க சமந்தா, சாய் பல்லவி ஆகியோரிடமும், வில்லனாக நடிக்க வைக்க கிச்சா சுதீப், உபேந்திரா ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்தது.

இது தவிர இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் 24 இல் தொடங்கும் என வெற்றிமாறன் அப்டேட் கொடுத்திருந்தார். அதன்படி இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதியில் நடைபெறும் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்க இருக்கிறது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது இந்த படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், நெல்சன், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்