பிக் பாஸில் இந்த வாரமும் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?
22 கார்த்திகை 2025 சனி 11:35 | பார்வைகள் : 406
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 50 நாட்களை நோக்கி நகர்ந்து வருகிறது. வழக்கமாக ஒரு சீசன் தொடங்கிய முதல் மாதத்திலேயே அதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்க முடியும். ஆனால் இந்த சீசனில் 50 நாட்கள் நெருங்கியும் வெற்றியாளரை கணிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு டஃப் ஆக இருக்கிறதா என்று கேட்டால், அதுதான் இல்லை. இந்த சீசனில் பைனல் வரை செல்லும் தகுதி தற்போதுள்ள போட்டியாளர்களில் ஒருவருக்கு கூட இல்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. இனி வரும் 50 நாட்களிலாவது ஏதாவது ட்விஸ்ட் நடக்குமா என ரசிகர்கள் ஏக்கத்துடன் பார்த்து வருகிறார்கள்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் சற்று வித்தியாசமாக நடைபெற்றது. இதில் எஃப்.ஜே, கானா வினோத், கம்ருதீன் தவிர எஞ்சியுள்ள 13 பேரும் நாமினேட் ஆகி இருந்தனர். இவர்களில் திவ்யா தான் ஓட்டிங்கில் லீடிங்கில் உள்ளார். இதனால் அவர் எலிமினேட் ஆக வாய்ப்பே இல்லை. அவருக்கு அடுத்தபடியாக விக்கல்ஸ் விக்ரம் மற்றும் பார்வதி இருக்கிறார். இவர்களும் 1 லட்சத்திற்கும் மேல் வாக்குகள் வாங்கி உள்ளதால் இவர்களும் எலிமினேட் ஆகமாட்டார்கள். இதையடுத்து சபரி, அரோரா, கனி, சாண்ட்ரா ஆகியோரும் கணிசமான வாக்குகள் வாங்கி தப்பி உள்ளனர்.
கெமி, ரம்யா ஜோ, அமித் பார்கவ், வியானா, சுபிக்ஷா, பிரஜன் ஆகியோர் தான் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். இவர்களில் யார் எலிமினேட் ஆகப்போகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. அதோடு இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடைபெற இருப்பதாக பேச்சு அடிபட்டது. ஆனால் அதெல்லாம் இல்லையாம். இந்த வாரம் ஒரே ஒரு எலிமினேஷன் தான் என்கிற அப்டேட் வெளியாகி உள்ளது. அதுவும் ஒரு பெண் போட்டியாளர் தான் எலிமினேட் ஆகி வீட்டுக்கு செல்ல உள்ளாராம்.
அந்த பெண் போட்டியாளர் வேறு யாருமில்லை கெமி தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து எதுவுமே செய்யாமல் ஓபி அடித்துக் கொண்டிருந்த போட்டியாளர்களில் கெமியும் ஒருவர். கடந்த வாரம் ஒன்னுமே இல்லாத பிரச்சனையை ஊதி பெரிதாக்கி கெட்ட பெயர் வாங்கினார் கெமி. இதனால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குறைந்து, கம்மியான வாக்குகளை பெற்றதால் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளார். நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த கவின், கெமியால் தான் நயன்தாரா உடன் நடிக்கும் ஹாய் படத்தின் ஷூட்டிங் தடைபட்டு இருப்பதாக கூறி இருந்தார். தற்போது அவர் எலிமினேட் ஆகி இருப்பதால் ஹாய் பட வேலைகள் மீண்டும் தொடங்க வாய்ப்பு உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan