நாடாளுமன்ற அர்ச்சுனாவுக்கு மரண அச்சுறுத்தல்
21 கார்த்திகை 2025 வெள்ளி 14:25 | பார்வைகள் : 522
புத்தளம் மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முகமட் பைசல் என்னை கொல்லுவதாக அச்சுறுத்தியுள்ளார் என்றும், இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் சபையில் முறையிட்டார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிலையியல் கட்டளை கீழ் புத்தளம் வைத்தியசாலை தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியது தொடர்பில் பாராளுமன்ற உணவக பகுதியில் வைத்து பைசல் எம்.பி தனக்கு அவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததாக அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை வரவு- செலவுத்திட்ட குழுநிலை விவாதம் ஆரம்பிக்கப்பட முன்னர் புத்தளம் வைத்தியசாலை தொடர்பில் அர்ச்சுனா எம்.பி சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதுடன், அதற்கு அமைச்சர் பதிலளித்திருந்தார்.
அதன் பின்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த சம்பவத்தின் பின்னர் உடனடியாக சபைக்குள் வந்த அர்ச்சுனா எம்.பி ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து அது தொடர்பில் சபாநாயகரிடம் முறையிட்டார்.
இதன்போது அர்ச்சுனா எம்.பி கூறுகையில், நான் புத்தளம் மாவட்டம் தொடர்பான கேள்வியை எழுப்பிவிட்டு சிற்றுண்டிச்சாலைக்கு போகும் போது, அங்கு வாசலில் உள்ள கேமராவுக்கு முன்னால் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் என்னை கொலை செய்வதாக தெரிவித்தார். தயவு செய்து அந்த வீடியோ பதிவை எடுத்து விசாரணையை முன்னெடுங்கள். எனக்கு சாவதற்கு பயமில்லை. ஆனால் ஒரு கேள்வியை கேட்டதற்காக இவ்வாறு கூறுகிறார் என்றார்.
இவ்வேளையில் பதிலளித்த சபாநாயகர் இது தொடர்பான விடயத்தை சிறப்புரிமையை பிரச்சினையாக முன்வையுங்கள் என்றார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan