Paristamil Navigation Paristamil advert login

நிலம் மற்றும் வீடு வாங்குதல் அதிகரிப்பு!!

நிலம் மற்றும் வீடு வாங்குதல் அதிகரிப்பு!!

20 கார்த்திகை 2025 வியாழன் 13:21 | பார்வைகள் : 464


இரண்டு ஆண்டுகளாக சரிவில் இருந்த நிலவிலைச் சந்தை 2025 ஆம் ஆண்டு மீண்டும் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது. PAP.fr ஆய்வின்படி, வாங்குபவர்கள் 2024 ஐ விட 11,3% அதிகரித்துள்ளனர். 

நாந்த் (Nantes -20%), மொன்ட்பெல்லியர்) (Montpellier-17%), மார்செய் (Marseille-14%) உள்ளிட்ட நகரங்களில் அதிக உயர்வு பதிவாகியுள்ளது. லியோன் (Lyon) மற்றும் போர்டோவில் (Bordeaux) வாங்குபவர்கள் குறைந்துள்ளனர். இந்த மாற்றத்தின் முக்கிய காரணமாக சதுர மீட்டருக்கான விலை குறைவு அல்லது விலையேற்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாந்த், லில், மார்செய் போன்ற நகரங்கள் மலிவாக மாறியதால் குடும்பங்கள் இந்நகரங்களை நாடுகின்றன; அதே நேரத்தில், போர்டோ மற்றும் லியோனின் உயர்ந்த விலை அருகிலுள்ள புறநகர் பகுதிகளை மக்கள் தேர்வு செய்ய வழிவகுக்கிறது.

நீஸ் (Nice)மற்றும் பரிஸ் விதிவிலக்குகளாக உள்ளன: விலை அதிகமாக இருந்தாலும் வாங்குபவர்கள் இந்நகரங்களில் அதிகரித்துள்ளனர். வட்டி விகிதங்கள் 4,3% இலிருந்து 3,2% ஆக குறைந்துள்ளதால் வீட்டு கடன்கள் எளிதாகியுள்ளது, இதன் பயனாக மக்களின் கொள்வனவுத்திறன் சிறு அளவில் உயர்ந்துள்ளது. உதாரணமாக மாதம் 4 000 யூரோக்கள் வருமானம் கொண்ட தம்பதியினரால் மார்செயில் 72 m2, நாந்தில் 65 m2, ஆனால் பாரிஸில் 25 m2 மட்டுமே வாங்க முடியும் என ஆய்வு குறிப்பிடுகிறது. சந்தையை மீண்டும் உயிர்ப்பிக்கிறவர்கள் முக்கியமாக முதன்முறையாக வீடு வாங்குபவர் ஆகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்