Paristamil Navigation Paristamil advert login

பூமியை நோக்கி வேகமெடுக்கும் மர்ம விண்கலம்

 பூமியை நோக்கி வேகமெடுக்கும் மர்ம விண்கலம்

20 கார்த்திகை 2025 வியாழன் 11:54 | பார்வைகள் : 118


விண்வெளியில் வேகமாக பயணிக்கும் ஒரு மர்மப் பொருள் தற்போது விஞ்ஞானிகள் மத்தியில் பல கேள்விகளைத் தூண்டியுள்ளது.

விஞ்ஞானிகளால் 3I/Atlas என அடையாளப்படுத்தப்பட்ட அந்த விண்கலம் அல்லது மர்மப்பொருள் எங்கிருந்து புறப்பட்டுள்ளது, அந்தப் பெயரால் அடையாளப்படுத்தப்படுவதன் காரணம் என்ன என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சிலர் அதை ஒரு வால் நட்சத்திரம் என்று கூறுகின்றனர், ஆனால், சூரிய குடும்பத்தின் வழியாக மணிக்கு 130,000 மைல் வேகத்தில் பாயும் அந்தப் பொருள், உளவுப் பணியில் ஈடுபட்டுள்ள வேற்றுகிரகவாசிகளின் தாய்க் கப்பலாக இருக்கலாம் என Avi Loeb என்ற கோட்பாட்டு இயற்பியலாளரின் கருத்து தற்போது மிகப்பெரிய விவாதங்களை ஏற்பத்தியுள்ளது.

மட்டுமின்றி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் கூட அது வேற்றுகிரகவாசிகளின் விமானமாக இருக்கலாம் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்.

டிசம்பர் 19 அன்று பூமியைக் கடந்து செல்லும் போது அதன் எதிர்பார்க்கப்படும் பாதையிலிருந்து விலகிச் சென்றால் அது மிகப்பெரிய மோதல் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.

வழக்கமாக, வால் நட்சத்திரங்கள் அவற்றைக் கண்டுபிடித்த நபர் அல்லது ஆய்வகத்தின் பெயரால் அறியப்படுகின்றன. ஆனால் தற்போது இந்த மர்மப்பொருளுக்கு நாசா புதிய குறியீட்டு முறைப்படி பெயரிட்டுள்ளது.

அது ஒரு இன்டர்ஸ்டெல்லர் என குறிப்பிடும் வகையில் I என்றும், இந்த வால் நட்சத்திரம் அதன் வகையில் மூன்றாவது என்பதால் 3 என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், 'அட்லஸ்' என்ற சொல், அதை முதலில் கண்டறிந்த தொலைநோக்கியை குறிக்கிறது என்றும் விளக்கமளித்துள்ளனர்.

கடந்த ஜூலை 1 ஆம் திகதி நாசா நிதியுதவியுடன் இயங்கும் ATLAS என்ற குழுவினரே முதல் முதலில் இதை அடையாளம் கண்டனர்.

இதுவரையான அறிவியல் வரலாற்றில் 3I/Atlas என்ற விண்கலம் அல்லது மர்மப்பொருள் நமது சூரிய மண்டலத்திற்குள் விண்மீன் மண்டலத்திலிருந்து நுழைந்ததாக அடையாளம் காணப்பட்ட மூன்றாவது பொருளாகும்.

இதற்கு முன்னர் 2017ல் 1I/ʻOumuamua மற்றும் 2019ல் 2I/Borisov ஆகியவை நாசாவால் அடையாளம் காணப்பட்டது. 3I/Atlas என்ற விண்கலம் பூமிக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்றும் நமது கிரகத்திற்கு 170 மில்லியன் மைல்களுக்கு மிக அருகில் செல்லாது என்றும் நாசா கூறுகிறது.

மேலும், இது அக்டோபர் தொடக்கத்தில் செவ்வாய் கிரகத்திலிருந்து 19 மில்லியன் மைல்களுக்குள் பறந்தது என்றும் சமீபத்தில் சூரியனைச் சுற்றி ஒரு ஸ்லிங்ஷாட் விளைவை உருவாக்கியது என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஹவாய், சிலி மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் அதன் பாதையைக் கண்காணித்து வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்