Paristamil Navigation Paristamil advert login

பரிசின் நினைவுச்சின்னங்கள் ஏன் இன்று சிவப்பு ஒளியில் ஒளிர்கின்றன?

பரிசின் நினைவுச்சின்னங்கள் ஏன் இன்று சிவப்பு ஒளியில் ஒளிர்கின்றன?

19 கார்த்திகை 2025 புதன் 22:21 | பார்வைகள் : 414


பரிசின் முக்கிய நினைவுச்சின்னங்கள் — நோத்திர்-டாம் (Notre-Dame), கொங்கோர்ட் (la Concorde), பொன் நெஃப் (le Pont Neuf), பசிலிக் சக்ரே-கூர் (la basilique du Sacré-Cœur) நவம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் சிவப்பு நிறத்தில் ஒளிர்கின்றன. 

நோத்திர்-டாம் இரண்டு நாட்களும், புதனும் வியாழனும், நள்ளிரவு வரை ஒளிரும். சக்ரே-கூர்பசிலிக்கா புதன்கிழமை மட்டும் நள்ளிரவு வரை சிவப்பாக ஒளிரும். இறுதியாக, பொன் நெஃப், மற்றும் கொங்கோர் புதன்கிழமை 19ம் திகதி மட்டும், ஒவ்வொரு மணிநேரத்தின் தொடக்கத்தில் 10 நிமிடங்கள், நள்ளிரவு வரை ஒளிரும்.

இது ஒரு காட்சிப் பிரம்மாண்டம் மட்டுமல்ல; உலகம் முழுவதும் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களின் நிலையை வெளிப்படுத்தும் நோக்கில் Aide à l’Église en Détresse (AED) அமைப்பு நடத்தும் « RedWeek » நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

இன்று உலகில் 413 மில்லியன் கிறிஸ்தவர்கள் மத சுதந்திரம் மறுக்கப்படும் நாடுகளில் வாழ்கின்றனர்; இதை நினைவூட்டும் வகையில் சிவப்பு ஒளி, தியாகிகளின் இரத்தத்தை குறிக்கும் சின்னமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த இயக்கத்தின் முக்கிய நிகழ்வு நவம்பர் 20 அன்று நோத்திர்-டாம் பேராலயத்தில் நடைபெறும் « Nuit des Témoins » ஆகும், இதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கள் நம்பிக்கைக்காக கொல்லப்பட்ட மிஷனரிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படும். 

உலகம் முழுவதும் 20 நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இந்த முயற்சியில் பங்கேற்கின்றன, மேலும் பிரான்சில் பரிஸ்சுடன் சேர்த்து அஞ்சேர்(Angers), அர்ஜெந்தெய்ல் (Argenteuil), ஜெனீவ் (Genève), துலோன் (Toulon) மற்றும் லூர்து (Lourdes) போன்ற இடங்களும் சிவப்பு ஒளியில் ஒளிர்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்